மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீண்டும் நாடு திரும்புகிறார்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீண்டும் நாடு திரும்புகிறார்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீண்டும் நாடு திரும்புகிறார்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2018 | 7:11 am

ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மீது விதிக்கப்பட்டிருந்த 13 வருட கால சிறைத்தண்டனை தளர்த்தப்பட்டதை அடுத்து, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மொஹமட் நஷீட் குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவின் தலைமை அரச சட்டத்தரணியால் அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேன்முறையீடு பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, மொஹமட் நஷீட்டுக்கு விதிக்கப்பட்ட 13 வருட கால சிறைத்தண்டனை தளர்த்தப்பட்டது.

ஜனநாயக ரீதியில் மாலைதீவு பிரஜைகளால் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆவார்.

2015ஆம் ஆண்டில் மொஹமட் நஷீட் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதையடுத்து, அவர் மீது 13 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் மாலைதீவிலிருந்து வௌியேறிய அவர் இலங்கையில் பல வருடங்களாக தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்