மதவாச்சி – தலைமன்னார் இடையேயான ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

மதவாச்சி – தலைமன்னார் இடையேயான ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

மதவாச்சி – தலைமன்னார் இடையேயான ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Nov, 2018 | 7:38 am

Colombo (News 1st) மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில்சேவை இன்று (01), மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புனரமைக்கப்பட்ட இந்த ரயில் மார்க்கத்தில் இன்று பரீட்சார்த்தப் போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலான் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்று மாலை முதல் வழமைபோல ரயில்சேவை முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் மார்க்கத்தில் காணப்படும் 3 பாலங்களின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அதேவேளை, நாளொன்றுக்கு கொழும்பிற்கும் தலைமன்னாருக்கும் இடையில் 4 ரயில்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ரயில் மார்க்கம் மூடப்பட்டிருந்த காலப்பகுதியில் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரை இலங்கை போக்குவரத்துசபைக்கு சொந்தமான பஸ்களின் விசேட சேவைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்