பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: இன்றைய பேச்சுவார்த்தையிலும் தீர்வில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: இன்றைய பேச்சுவார்த்தையிலும் தீர்வில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு: இன்றைய பேச்சுவார்த்தையிலும் தீர்வில்லை

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2018 | 8:52 pm

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டு ஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தோட்டக் கம்பனிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இன்று கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதையடுத்து எவ்விதத் தீர்வும் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வௌியேறினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் தொழிற்சங்கப் பிரிதிநிதிகள் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினூடாக தௌிவுபடுத்தினர்.

இதன்போது, தோட்டக் கம்பனிகள் விட்டுக்கொடுப்பிற்கு இடமளிக்காது நடந்துகொண்டதாகவும் தொழிற்சங்கங்கள் 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் எனும் கோரிக்கையைத் தௌிவாகக் கோரியதாகவும் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்