நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அரச உத்தியோகத்தர்கள் மதிப்பளிக்க வேண்டும்: சாகல ரத்நாயக்க

நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அரச உத்தியோகத்தர்கள் மதிப்பளிக்க வேண்டும்: சாகல ரத்நாயக்க

நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அரச உத்தியோகத்தர்கள் மதிப்பளிக்க வேண்டும்: சாகல ரத்நாயக்க

எழுத்தாளர் Bella Dalima

01 Nov, 2018 | 7:52 pm

Colombo (News 1st) நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு அரச உத்தியோகத்தர்கள் மதிப்பளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க அறிக்கையொன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளார்.

அந்த சட்ட வரைபை வேண்டுமென்றே மீறுவது தண்டணைக்குரிய பாரிய குற்றம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக வழங்கப்படும் நியமனங்களுக்கு சட்டப்பூர்வத்தன்மை காணப்படாது எனவும் சாகல ரத்னாயக்க கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலை முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடனேயே அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயரிய சபையான பாராளுமன்றத்தினூடாக நெருக்கடிக்குத் தீர்வு காண ஐக்கிய தேசியக் கட்சியினர் மாத்திரமின்றி நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் அது குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் சாகல ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்