பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு

பாராளுமன்றம் 7ஆம் திகதி கூடும் என சபாநாயகர் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2018 | 11:16 am

எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

அரசியற்கட்சி பிரதிநிதிகளுடனான கூட்டத்தின் போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதியுடன் சுமார் ஒன்றரை மணித்தியாலம் கலந்துரையாடியதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரமளவில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து, எதிர்வரும் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.