பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை; அடுத்து மாகாண சபைத் தேர்தலே – மஹிந்த அமரவீர

பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை; அடுத்து மாகாண சபைத் தேர்தலே – மஹிந்த அமரவீர

பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை; அடுத்து மாகாண சபைத் தேர்தலே – மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Bella Dalima

08 Nov, 2018 | 8:36 pm

Colombo (News 1st) பாராளுமன்றத்தைக் கலைக்கும் திட்டம் இல்லை என்றும் சில மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்த தம்முடனுள்ள அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சபாநாயகரினால் தயாரிக்கப்படும் அனைத்துக் கடிதங்களையும் சிறிகொத்தவே தயாரிப்பதாகவும் அலரி மாளிகை தயாரிக்கும் கடிதங்களுக்கே சபாநாயகர் கையொப்பமிடுவதாகத் தாம் கருதுவதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

அரசியலமைப்பிற்கு அப்பால் செயற்படுவது சிறைத்தண்டனை விதிக்கும் அளவிற்கு தண்டனைக்குரிய குற்றமாகவே காணப்படுவதாகவும் இந்த விடயத்தில் சபாநாயகர் தெளிவடைய வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடுவதற்கான தேசிய நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் பலா மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.