இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

எழுத்தாளர் Staff Writer

02 Nov, 2018 | 3:56 pm

Colombo (News 1st)  இலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

அதன்படி, 61 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை, 11 இடங்கள் முன்னேறி 100 ஆவது இடத்தை அடைந்துள்ளது.

கட்டுமானத்துறைசார் அனுமதிப் பத்திரங்களைக் கையாளும் நடைமுறையை சீராக்கியுள்ள இலங்கை, புதிய வசதிகள் மூலம் கால அவகாசத்தை பெருமளவில் குறைத்துள்ளதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியா 77 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 136 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.