அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

அளுத்மாவத்தை வீதியூடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Nov, 2018 | 5:23 pm

Colombo (News 1st)  கொழும்பு முகத்துவாரம் – அளுத்மாவத்தையின் மாதம்பிட்டி முதல் பஞ்சானந்த வீதி வரையான பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குழாய் நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி அதிகாலை5 மணி வரை இந்த வீதியுடனான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள் மாதம்பிட்டி வீதியூடாக முகத்துவாரம் வீதி மூலம் அளுத்மாவத்தைக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள் பஞ்சானந்த வீதி ஊடாக மாதம்பிட்டிய , அளுத்மாவத்தை வழியாகப் பயணிக்க முடியும்.