வரி விதிப்பு மக்களின் சுமையை அதிகரிக்கக்கூடாது 

மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் வரி விதிப்பு இருக்கக்கூடாது: மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 31-10-2018 | 7:48 PM
Colombo (News 1st) மக்களின் சுமையை அதிகரிக்கும் வகையில் வரி விதிப்பு இருக்கக்கூடாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாடு இருக்க வேண்டும் எனவும் பொருளாதார வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். மேலும், எரிபொருள் விலையேற்ற சூத்திரத்தைக் கைவிட்டு முன்பு போல் அதனை வழமைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் வௌிநாடுகளுக்கு வளங்கள் தாரைவார்க்கப்படுவதை நிறுத்துவதற்கான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக இன்று கடமைகளைப் பொறுப்பேற்ற போதே இவ்விடயங்களைக் குறிப்பிட்டார். சர்வமத ஆசியுடன் பிரதமர் இன்று நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக கடமைகளை ஆரம்பித்தார்.