நிதி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

by Staff Writer 31-10-2018 | 4:58 PM
Colombo (News 1st)  நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் புதிய செயலாளராக  S. R. ஆட்டிகல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைக் கற்றார். இலங்கை மத்திய வங்கியில் சேவையாற்றிய அவர் இதுவரை உதவி ஆளுநராகவும் திறைசேரியில் பிரதி செயலாளராகவும் பணியாற்றினார்.