by Bella Dalima 31-10-2018 | 9:45 PM
Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வல்லரசு நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் எடுபிடிகள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
தமிழ் தேசத்தின் நலனைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படவில்லை எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தினார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தமை குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காணொளியில் காண்க...