சபாநாயகர் ஜனாதிபதியை சந்தித்து பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தல்
by Staff Writer 31-10-2018 | 9:20 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இந்தக் கலந்துரையாடலுக்காக இன்று மாலை 5.45 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றிருந்தார்.
ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் இதன்போது சபாநாயகர் ஜனாதிபதிக்கு விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் தினங்களில் தனது தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.