இலங்கையின் ஆட்சியாளரை சட்ட வரைவுக்கு அமைவாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்: ரொபர்ட் பெல்லடினோ

இலங்கையின் ஆட்சியாளரை சட்ட வரைவுக்கு அமைவாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்: ரொபர்ட் பெல்லடினோ

இலங்கையின் ஆட்சியாளரை சட்ட வரைவுக்கு அமைவாகவே தேர்ந்தெடுக்க வேண்டும்: ரொபர்ட் பெல்லடினோ

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2018 | 8:49 pm

Colombo (News 1st)  இலங்கையின் ஆட்சியாளரை சம்பிரதாயப்பூர்வமாகவும் சட்ட வரைவுக்கு அமைவாகவுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உதவி ஊடகப் பேச்சாளரான ரொபர்ட் பெல்லடினோ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி உடனடியாக சபாநாயகருடன் கலந்துரையாடி ஆலோசனைகளைப் பெற்று செயற்பட வேண்டும் எனவும் ரொபர்ட் பெல்லடினோ வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து சகலவற்றையும் தீர்மானிக்க வேண்டுமே தவிர எவரையும் அச்சுறுத்தியல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்