தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என மீண்டும் பெயர்மாற்றம்

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என மீண்டும் பெயர்மாற்றம்

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என மீண்டும் பெயர்மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

30 Oct, 2018 | 8:32 pm

Colombo (News 1st) பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த ஹட்டன் – பூல்பேங்க் தொழிற்பயிற்சி நிலையம், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் என மீண்டும் இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையை இன்று திறந்து வைத்தார்.

இதேவேளை, மண் சரிவு ஏற்பட்ட ஹட்டன் – நியூவெலி பகுதிக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த வீதியில் இலகுரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்க முடியும்.

பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்த நோர்வூட் மைதானமும் தொண்டமான் மைதானம் என இன்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்