பிரதமர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

பிரதமர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

பிரதமர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்கிறார்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2018 | 6:54 am

Colombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இன்று (29) காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக பிரதமரின் செயலாளர் எஸ். அதரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒத்துழைப்பினை வழங்க முன்வருமாறு பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றினூடாக அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மூவர், நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் ஆகியோரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை, விஜேராமையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துள்ளனர்.

இதேவேளை, புரூண்டி இராஜ்ஜிய ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியுடன் அந் நாட்டின் உப ஜனாதிபதி கெஸ்டன் சின்டிம்வோ நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார்.

இதனிடையே, கடற்படைத் தளபதி சிறிமெவன் ரணசிங்க மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் நேற்று பிற்பகல் பிரதமரை சந்தித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்