தகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல்

தகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல்

தகவல் தொடர்பில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2018 | 9:43 am

கடந்த சில நாட்களாக பல்வேறு கருத்துக்களை பலர் சமூக வலைத்தளங்களில் வௌியிட்டு வந்தனர்.

உளரீதியாக பாதிக்கப்பட்ட அவ்வாறான நபர்கள், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் நாட்டையும் குழப்பும் நோக்கில் செயற்பட்டு வந்தனர்.

இதனடிப்படையில், நேற்று மாலை இவ்வாறானதொரு செயற்பாடு பதிவாகியது.

அதாவது வேறொரு ஊடகத்தின் பெயரை குறிப்பிட்டு குறுந்தகவல் அடங்கிய பொய்யான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டது.

இது கவனிக்கத்தக்க விடயமாகும்.

அனைத்து ஊடகங்களும் மக்களுக்கு சரியான தகவலை வழங்கும் நோக்கிலேயே செயற்படுகின்றன.

அந்த வகையில், நியூஸ்பெஸ்ட், அத தெரண, ஹிரு மற்றும் அரச ஊடகம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பு வாய்ந்த ஊடகங்களின் ஊடாக உங்களுக்கு கிடைக்கும் செய்திகளை மாத்திரமே நீங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதுவீர்கள் என நாம் நம்புகின்றோம்.

அனைத்து ஊடகங்களும் மக்களுக்காக சரியான தகவல்களை வழங்கவே முயற்சிக்கின்றன என்பதையும் நாங்கள் மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அரச ஊடகங்களில் வௌியிடப்படும் செய்திகளை மாத்திரமே கருத்திற் கொள்ளுமாறு நாம் மீண்டும் நினைவூட்டுகின்றோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்