ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Oct, 2018 | 6:09 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தெமடகொட தலைமையக வளாகத்தில் நேற்று (28) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவரில் உயிரிழந்துள்ளார்.

02. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

03. ஜனநாயக சம்பிரதாயத்திற்கு அமைய, சபாநாயகருக்கு அறிவித்தே பாராளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

04. ரணில் விக்ரசிங்கவிற்கு மக்கள் வழங்கிய ஆணை ஊடாக, மக்கள் எதிர்பார்த்த திருட்டு தொடர்பான விடயத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. நல்லாட்சியை முன்னெடுக்க முடியாமல் போனது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

05. இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

வௌிநாட்டுச் செய்தி

01. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிட்ஸ்பேர்க் (Pittsburgh) நகரிலுள்ள வழிபாட்டுத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்