ஹெரோயின் அடங்கிய வில்லைகளுடன் பாகிஸ்தானிய பிரஜைகள் கைது

ஹெரோயின் அடங்கிய வில்லைகளுடன் பாகிஸ்தானிய பிரஜைகள் கைது

ஹெரோயின் அடங்கிய வில்லைகளுடன் பாகிஸ்தானிய பிரஜைகள் கைது

எழுத்தாளர் Staff Writer

28 Oct, 2018 | 9:20 am

Colombo (News 1st) ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் அடங்கிய 89 வில்லைகளை விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தானிய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டி கரையோர வீதியில் சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 மற்றும் 36 வயதான இரண்டு பாகிஸ்தான் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்