சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Oct, 2018 | 6:21 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, எதிர்வரும் நவம்பர் 16ஆம் மீண்டும் பாராளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

02. ஜனநாயகத்தையும் சட்டத்தையும் மதித்து செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

03. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சைக்கு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

04. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று (27) இரவு மாத்திரம் அலரிமாளிகையில் நிம்மதியாகத் தூங்குவதற்கு நேரம் வழங்குவதாகவும் நாளை (28) காலை முதல் அவர் அங்கு இருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

05. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வௌிநாட்டுச் செய்திகள்

01. தஞ்சம் கோரிய குடி​யேற்றவாசிகளுக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளதாக மெக்ஸிக்கோ அறிவித்துள்ளது.

02. ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் தொடர்புடைய 18 சந்தேகநபர்களை சரணடையுமாறு கோரும் கோரிக்கைக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்