ரணில் விக்ரமசிங்கவிற்கு விமல் வீரவன்ச காலக்கெடு

ரணில் விக்ரமசிங்கவிற்கு விமல் வீரவன்ச காலக்கெடு

ரணில் விக்ரமசிங்கவிற்கு விமல் வீரவன்ச காலக்கெடு

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2018 | 7:31 pm

Colombo (News 1st) முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று இரவு மாத்திரம் அலரி மாளிகையில் நிம்மதியாகத் தூங்குவதற்கு நேரம் வழங்குவதாகவும் நாளை காலை முதல் அவர் அங்கு இருக்க முடியாது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நேற்று (26) இரவு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர புதிய பிரதமரை சந்தித்து, அவரின் ஆலோசனைக்கு அமைய செயற்படுவதாகத் தெரிவித்ததாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அலரி மாளிகைக்கு மக்கள் வந்து விரட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைக் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்