மக்கள் விடுதலை முன்னணி சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணி சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணி சுயாதீனமாக செயற்படத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2018 | 6:07 pm

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படத் தீர்மானித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த விடயத்தை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

தமது அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக எந்தவொரு மோசமான சூழ்ச்சிகர செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடிய தலைவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வழங்கப்பட்ட 62 இலட்சம் மக்கள் ஆணையின் உரிமை தொடர்ந்தும் மைத்திரிக்கோ, ரணிலுக்கோ இல்லை. இந்த நாட்டை புதிய திசையை நோக்கி இட்டுச் செல்வதாயின் இந்த மக்கள் ஆணைக்கு பொறுப்புக்கூறக்கூடிய, மக்கள் ஆணையை வழங்கிய மக்களின் எதிர்பார்ப்புடன் இணைந்து செயற்படக்கூடிய புதிய அரசியல் முகாமொன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஏலத்திற்கு வந்துள்ளனர். சந்தையில் சாதாரணமாக கத்தரிக்காய் ஒரு கிலோ 60 ரூபாவிற்கு விற்கப்படும். சந்தை முடிவடையும் நேரத்தில் எஞ்சிய அனைத்து கத்தரிக்காய்களையும் இணைத்து 20 ரூபாவிற்கு விற்கப்படும். அழுகிய கத்தரிக்காய், அழுகிய மீன் விற்கப்படும் விதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஏலத்திற்கு விடப்பட்டுள்ளனர். மக்கள் பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்து அனுப்பியுள்ளனர். அரசியல் நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அந்த பிரதிநிதிகளின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். ஆகவே, பாராளுமன்றத்தை ஒத்திவைப்பது எவ்வாறான சூழ்ச்சிகர செயற்பாடு என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்