பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவு

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவு

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Oct, 2018 | 12:52 pm

Colombo (News 1st) ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றம் கூடும் என, இந்த அறிவிப்பு வௌியானதன் பின்னர் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் பின்னணியில் ஜனாதிபதியால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றதைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நிலைமையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்