ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுக: ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் மஹிந்த ராஜபக்ஸ வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2018 | 8:15 pm

Colombo (News 1st)  புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து இன்று அதிகாலை உரையாற்றினார்.

இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே தமது எதிர்பார்ப்பு எனவும் மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதே தமது நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து செயற்படுமாறு ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்