அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும்; அமைதியாக செயற்ப‍டுக: சபாநாயகர் வேண்டுகோள்

அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும்; அமைதியாக செயற்ப‍டுக: சபாநாயகர் வேண்டுகோள்

அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும்; அமைதியாக செயற்ப‍டுக: சபாநாயகர் வேண்டுகோள்

எழுத்தாளர் Bella Dalima

27 Oct, 2018 | 7:53 pm

Colombo (News 1st) நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்ச்சைக்கு ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, அரசியலமைப்பிற்கு அமைவாக தீர்வு காண முடியும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

பக்கசார்பின்றியும் நீதியான முறையிலும் தாம் நடவடிக்கைகளை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் புத்தி சாதுர்யமாகவும் பொறுப்புடனும் அமைதியாகவும் செயற்படுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் பொதுமக்களிடமும் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அரச நிறுவனங்களுக்குள் சிக்கல் நிலையை உருவாக்குவது, சர்வதேசத்தின் முன்னிலையில் அபகீர்த்தியை ஏற்படுத்தும் விடயம் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனால் அமைதியாக செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களிடமும் சபாநாயகர் கரு ஜயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்