பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஸ

பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஸ

by Bella Dalima 26-10-2018 | 10:06 PM
Colombo (News 1st)  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். எனினும், தாம் தான் தற்போதும் பிரதமர் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்‌ஸ பிரதமராகப் பதவியேற்றது அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கூட்டத்திற்காக அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார். அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக நாளைய தினம் (27) பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராசா இந்தத் தகவலைத் தெரிவித்தார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தேசிய ரீதியாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் தற்போது விவாதித்து வருவதாக மனோ கணேசன் தகவல் வௌியிட்டுள்ளார்.