சவுதியின் விளக்கத்தில் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது

ஜமால் கொலை: சவுதியின் விளக்கத்தில் நம்பகத்தன்மை குறைவு - தெரேசா மே

by Chandrasekaram Chandravadani 25-10-2018 | 9:18 AM
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பில் சவுதி அரேபியாவின் விளக்கத்தில், நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாக அந்நாட்டு மன்னர் சல்மானிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியதாக, மேயின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜமாலின் கொலை குறித்த விளக்கம் நம்பகத்தன்மை குறைவானதாகக் காணப்படுவதாகக் கூறிய தெரேசா மே, உண்மையில் என்ன நடந்தது என்பதை உடனடியாகத் தௌிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளதென்பதை நினைவில்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேநேரம், இந்த விடயம் தொடர்பிலான துருக்கியின் விசாரணைக்கு சவுதி அரேபியா ஒத்துழைக்க வேண்டும் எனவும் விசாரணையின் பின்னர் வௌியாகும் முடிவில் வௌிப்படைத் தன்மை காணப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரேசா வலியுறுத்தியுள்ளார். கடந்த 2ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி, தூதரகத்தினுள் இடம்பெற்ற மோதலின்போது உயிரிழந்தார் என சவுதி அரேபியா, ஒருசில நாட்களின் பின்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.