தோட்டத் தொழிலாளர்களின் புதிய சம்பள விபரம்

​தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 600 வழங்கத் தீர்மானம்

by Staff Writer 25-10-2018 | 1:01 PM
Colombo (News 1st) பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாளுக்கான அடிப்படை சம்பளமாக 600 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. அடிப்படை சம்பளத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான இறுதி தீர்மானம் பெருந்தோட்ட சம்மேளனத்தினால் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, தோட்ட தொழிலாளர்களின் ஒருநாளுக்கான அடிப்படை சம்பளத்தினை 500 ரூபாவிலிருந்து 20 வீதத்தால் அதிகரித்து 600 ரூபாவை வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட சம்மேளனத்தின் தலைவர் சுனில் போஹொலியத்தவை மேற்கோள் காட்டி இந்த ஊடக அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதேவேளை, தொழிலாளர்களின் அதிகபட்ட மொத்த சம்பளமாக 940 ரூபா வரை வழங்க பெருந்தோட்ட சம்மேளனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.