அரசியலமைப்புச் சபை கூட்டம் இன்று

அரசியலமைப்புச் சபை கூட்டம் இன்று

அரசியலமைப்புச் சபை கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2018 | 6:52 am

Colombo (News 1st) அரசியலமைப்புச் சபை இன்று (25) பிற்பகல் 1.30 மணிக்கு கூடவுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அத்துடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நேற்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரின் சேவையை மதிப்பிடுவது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்