அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2018 | 8:44 am

Colombo (News 1st) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட 8 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதாளக்குழு தலைவரான ஜுலம்பிட்டிய அமரே உள்ளிட்ட கைதிகளே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்புக் கடமைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அண்மையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்திய கைதிகள் களுத்துறை, காலி, மொனராகலை உள்ளிட்ட சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக துஷார உபுல்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்