செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-10-2018 | 5:53 AM
Colombo (News 1st உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தம்மை துன்புறுத்துவதாகத் தெரிவித்து நீதிமன்றத்தில் நேற்று எழுத்துமூல அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 02. ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது, தாம் எதிர்பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியைக் காணமுடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். 03. ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்கத் தொலைபேசியில் அழிக்கப்பட்ட குரல்பதிவு தொடர்பில் ஆய்வு செய்வதற்காக, கையடக்கத் தொலைபேசியை ஹொங்கொங்கிற்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது. 04. கொழும்பு ஹயட் ஹோட்டல் கட்டடத் தொகுதியை முதலீட்டாளர் ஒருவரிடம் கையளிக்கும் கொடுக்கல் வாங்கல் சந்தேகத்திற்கிடமானது என தாம் ஏற்கனவே தெரிவித்த கருத்து தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 05. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மெற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில், விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. கொரிய எல்லையில் உள்ள தத்தமது பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் சோதனை நிலையங்களை அகற்றுவதற்கு வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. 02. சவுதி அரேபிய துணைத் தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டமை மிகவும் கொடூரமாகத் திட்டமிடப்பட்ட செயல் என துருக்கிய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. விளையாட்டுச் செய்திகள் 01. இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறையில் 219 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. 02. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதித் தலைவரான பியல் நந்தன திசாநாயக்க எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.