சுற்றுலாவிற்கு உகந்த நாடுகளில் இலங்கை முதலிடம்

சுற்றுலாவிற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம்

by Staff Writer 24-10-2018 | 2:17 PM
2019 ஆம் ஆண்டில் சுற்றுலாவிற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. லோன்லி ப்ளேனட் அமைப்பினால் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தரப்படுத்தலில் அடுத்த நான்கு இடங்களில் முறையே வேர்ஜினியா, ஸிம்பாப்வே, பனாமா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் தரப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவடைந்தததன் பின்னர், சுற்றுலாத்துறை, உட்கட்டமைப்பு, போக்குவரத்துத்துறை, ஹோட்டல் தொழில்துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக லோன்லி ப்ளேனட் அமைப்பு தெரிவித்துள்ளது.