கருப்புச் சட்டைப் போராட்டம் நிறைவு

கருப்புச் சட்டைப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது

by Staff Writer 24-10-2018 | 5:03 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினத்திற்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர். எனினும், போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர் தொடர்ந்தும் காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். ''கருப்புச் சட்டைப் போராட்டம்'' என இது பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். பொதுமக்களுக்கும் அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் இந்த போராட்டம் இடம்பெற்றது. எந்தவொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் போராட்டத்தில் கலந்துகொள்ள இடமளிக்கப்படவில்லை. போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தமை விசேட அம்சமாகும்.