எதிர்பார்த்த ஐக்கிய ​தேசியக்கட்சியை காணமுடியவில்லை

தேர்தலில் களமிறங்கிய போது எதிர்பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியைக் காணமுடியவில்லை: ஜனாதிபதி

by Staff Writer 23-10-2018 | 5:58 PM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய போது தாம் எதிர்பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியைக் காணமுடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார். சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான மகாமான்ய டி.எஸ். சேனாநாயக்க, போதை ஒழிப்பிற்கு அர்ப்பணிப்பு செய்த F.R சேனாநாயக்க, முன்னாளர் பிரதமர் டட்லி சேனாநாயக்க மற்றும் R.G சேனாநாயக்க ஆகியோரை நினைவுகூரும் வகையில் இந்த நகிழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, ஜனாதிபதி பின்வருமாறு குறிப்பிட்டார்,
டி.எஸ்.சேனாநாயக்க, பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் இணைப்பே மைத்திரிபால சிறிசேன. பொது வேட்பாளராக 2014 நவம்பர் மாதம் ராஜபக்ஸ அரசாங்கத்திலிருந்து வௌியேறி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஜனாதிபதித் தேர்தலுக்காக இணையும் போது டி.எஸ். டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இணைகிறேன் என்றே நான் எண்ணியிருந்தேன். எனினும், டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி அல்லவென்பது எனக்கு பின்னரே புரிந்தது. டி.எஸ் சேனாநாயக்கவிடம் நியாயம், வௌிப்படைத்தன்மை என்பன காணப்பட்டன. டி.எஸ், F.R சேனாநாயக்க, டட்லி, RD ஆகியோர் அர்ப்பணிப்பு மிக்கவர்கள். ஊழல், மோசடி, திருட்டு ஆகியன அவர்களிடம் ஒருபோதும் காணப்படவில்லை. அதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய கட்சியாக கட்டியெழுப்பப்பட்டது. டி.எஸ். சேனாநாயக்கவை நினைவுகூரும் இன்றைய தினத்தில், எதிர்காலத்தில் டி.எஸ், டட்லி ஆகியோரின் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் உருவாக வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.

ஏனைய செய்திகள்