திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 23-10-2018 | 5:51 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. மலையக மக்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். 02. அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது. 03. மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் உரிமையை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வீதி அபிவிருத்திக்கான தேசியசபை குறிப்பிட்டுள்ளது. 04. சியம்பலாண்டுவ பகுதியில் ரி 56 ரக – 3000 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 05. மாத்தறை – ஊருபொக்க பகுதியில் நேற்று (22) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் தளமொன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். 02. தாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, 170 பேர் காயமடைந்துள்ளனர். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளரான பியல் நந்தன திஸாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். 02. இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.