தாதியர் சேவைக்குத் தேவையான உயர எல்லையில் திருத்தம்

தாதியர் சேவைக்குத் தேவையான உயர எல்லையில் திருத்தம்

by Staff Writer 23-10-2018 | 3:32 PM
Colombo (News 1st) தாதியர் சேவைக்குத் தேவையான உயர எல்லையில் திருத்தம் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தாதியர் சேவை சட்டமூலத்தின் பிரகாரம், தாதியர் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் 147.3 சென்டிமீட்டர் உயரமாக இருத்தல் அவசியமாகும். எனினும், தாதியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான உயரத்தை 145 சென்டிமீட்டர் வரை குறைப்பதற்கு அனுமதியை வழங்குமாறு சுகாதார அமைச்சின் அரச சேவைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தாதியர் சேவைக்கு இணைந்துகொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் 121 பேர் உரிய உயரத்தைக் கொண்டிராததால் அவர்களுக்கு தாதியர் சேவையில் இணைந்துகொள்ள முடியாமற்போனது. இந்த விடயம் குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், அவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறு ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொனால்ட் முரகேவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.