ஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறக்கம்

கொழும்பு - மட்டக்களப்பு வீதியின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

by Staff Writer 23-10-2018 | 12:19 PM
Colombo (News 1st) ஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால், கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையில் வீதி தாழிறங்கியுள்ளதுடன், சிறு பகுதி உடைந்துள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனால், வீதியில் ஒருவழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. இதேவேளை, தலவாக்கலை - நுவரெலியா ஏ 7 வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், நானுஓயா, தங்ககலை, எல்ஜின், மெராயா, ஊவகெலே ஆகிய பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாற்றுவீதிகளாக நுவரெலியா - இரதல்ல வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.