வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதனூடாக அணியில் மாற்றங்கள்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதனூடாக அணியில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் - மார்க் வூட்

by Staff Writer 23-10-2018 | 2:16 PM
இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன் ஊடாக, அணியில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளரான மார்க் வூட் (Mark Wood) தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகின்ற இந்தப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகின்றது.
அணியில் இடம்பிடிப்பதற்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். எனினும், அணியில் சில சில மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என நான் நினைக்கிறேன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதன்மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். இளம் வீரர்களுக்கு அது பயனுடையதாக அமையும். அவர்களால் தொடர்ச்சியான வெற்றிகளை அணிக்கு பெற்றுக்கொடுக்க முடியுமாயின் அது சிறப்பானதாகும். இவ்வாறான தொடர்களிலேயே திறமையான இளம் வீரர்களை இணங்கான முடியும். அணி வீரர்கள் சிறந்த மனநிலையோடு இருக்கின்றனர். அந்த மனநிலை எமக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றைய போட்டியிலும் அதனை மேம்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கிறோம். இன்றைய போட்டியில் வெற்றி பெறுகின்ற இங்கிலாந்து அணியில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளரான மார்க் வூட் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தத் தொடரின் சகல போட்டிகளும் சிரச மற்றும் டிவி வன் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றமை நினைவுகூரத்தக்கது.