கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில் விரிவான விசாரணை

by Staff Writer 23-10-2018 | 7:24 AM
Colombo (News 1st) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மெற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில், விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கென புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்புடனே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி நியூஸ்பெஸ்ட்டிடம் தெரிவித்துள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அத்தியட்சகர் இடமாற்றம் கோரி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதனால் இந்த சந்தேகம் உறுதிப்படுத்தப்படுவதாக குறித்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார் . சிறைச்சாலை அத்தியட்சகருக்கு எதிராக அதிகாரிகள் சிலர் இதனைத் திட்டமிட்டு செய்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வௌியிட்டுள்ளார். சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறு கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், நேற்று மதியம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதேவேளை, கொழும்பு மெகசின் சிறைச்சாலை மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளுக்கும் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் விசேட அதிரிடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்படும் என சிறைச்சாலைகள் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்