வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

வௌிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 7:34 am

Colombo (News 1st) வௌிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட பகுதியைச் சேர்ந்த 52 வயதான வர்த்தகர் ஒருவரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்த சந்தேகநபரின் கணினியில் மிக சூட்சுமமாக வைக்கப்பட்டிருந்த நாணயத்தாள்கள், சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களில் அமெரிக்க டொலர், சிங்கப்பூர் டொலர், யூரோ மற்றும் இலங்கை ரூபா உள்ளிட்டவை அடங்குகின்றன.

குறித்த சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களின் மொத்த பெறுமதி 64,13,273 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்