மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

மாளிகாவத்தையில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 7:16 am

Colombo (News 1st) மாளிகாவத்தை பொலிஸ் பிரிவிற்குபட்ட சில வீதிகளில் இன்று (23) பகல் 12.30 மணி முதல் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

கிரிக்கெட் போட்டி நிறைவுபெறும் வரை, டொக்டர் பிரிட்டோ பபாபுள்ளே வீதி மற்றும் கெத்தாராம ஆகிய வீதிகளிலேயே போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஶ்ரீ சத்தர்ம மாவத்தை முதல் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கு வரையிலும், டொக்டர் பிரிட்டோ பபாபுள்ளே வீதியின் கிரேண்ட்பாஸ் வீதி வரையிலுமே வாகனங்கள் பயணிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் மாளிகாவத்தை 100 அடி வீதி, மைத்திரி போதிராஜ மாவத்தையில் வசிக்கும் மக்களுக்கான மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த காலப்பகுதியில், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்