by Staff Writer 23-10-2018 | 12:32 PM
Colombo (News 1st) மகாவலி அபிவிருத்தி வலயத்தின், 65,000 ஏக்கர் நிலப்பரப்பில் மாதாந்த போகச்செய்கையை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், 30,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கையும் மேலதிக 30,000 ஏக்கர் நிலப்பரப்பில் மக்காச்சோளம், கௌபி, பயறு, மிளகு, குரக்கன் மற்றும் பழமுந்திரிகை செய்கை ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளதாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்காக விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை விவசாயத் திணைக்களத்தினூடாக வழங்கவுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது.