பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் நான்காவது நாளாகவும் விசாரணை

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் நான்காவது நாளாகவும் விசாரணை

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் நான்காவது நாளாகவும் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 7:02 am

Colombo (News 1st) பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று (23) நான்காவது நாளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிடம் நேற்று, 11 மணித்தியாலங்கள் விசாரணைகள் நடத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நேற்று முற்பகல் 09.30 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அவர் வந்திருந்ததுடன், இரவு 08.30 மணியளவில் மீண்டும் அங்கிருந்து அவர் சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோர் மீதான கொலை சதிமுயற்சி தொடர்பில் ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில், நாலக டி சில்வாவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை மற்றும் வௌ்ளிக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய நாலக்க டி சில்வாவிடம் 9 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்