திருகோணமலையில் 15 வயது சிறுமி படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

திருகோணமலையில் 15 வயது சிறுமி படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

திருகோணமலையில் 15 வயது சிறுமி படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 6:25 pm

Colombo (News 1st)  திருகோணமலை – மொறவெவ, தபகஹவுல்பொத்த பகுதியில் 15 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு, சடலம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட நபருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி ஹேரத் டில்ஹானி குமாரி குணதிலக்க என்ற 15 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதிவாதி, சிறுமியை காட்டுப் பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கச் செய்து கொலை செய்துவிட்டு, சடலத்தை அருகில் புதைத்தமை நிரூபணமாகியுள்ளது.

பின்னர் குறித்த சடலத்தை அவர் மீளத்தோண்டியெடுத்து எரியூட்டியமையும் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழக்கின் முதலாவது பிரதிவாதியான 27 வயதான இளைஞருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை விதித்துள்ளார்.

வழக்கின் இரண்டாவது பிரதிவாதி குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
cont[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்