கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

கொழும்பு – மட்டக்களப்பு வீதியின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 12:19 pm

Colombo (News 1st) ஹபரண ஏழாம் மைல்கல் பகுதியில் வீதி தாழிறங்கியுள்ளதால், கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையில் வீதி தாழிறங்கியுள்ளதுடன், சிறு பகுதி உடைந்துள்ளதாகவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனால், வீதியில் ஒருவழிப்பாதை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை – நுவரெலியா ஏ 7 வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், நானுஓயா, தங்ககலை, எல்ஜின், மெராயா, ஊவகெலே ஆகிய பகுதி மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மாற்றுவீதிகளாக நுவரெலியா – இரதல்ல வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்