அரசியலமைப்புச் சபை வியாழக்கிழமை கூடுகிறது

அரசியலமைப்புச் சபை வியாழக்கிழமை கூடுகிறது

அரசியலமைப்புச் சபை வியாழக்கிழமை கூடுகிறது

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2018 | 9:35 am

Colombo (News 1st) அரசியலமைப்புச் சபை எதிர்வரும் வியாழக்கிழமை (25) கூடவுள்ளது.

உயர்நீதிமன்றத்துக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழுக்கள் பலவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அமர்வில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அரசியலமைப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்களாக பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய உறுப்பினர்களாக மஹிந்த சமரசிங்க சமல் ராஜபக்ஸ மற்றும் தலதா அதுகோரள ஆகியோர் உள்ளதுடன், சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நாகநாதன் செல்வகுமாரன், கலாநிதி ஜயந்த தனபால அஹமட் ஜாவீட் யூசுப் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்