முச்சக்கரவண்டிகளை மன்றில் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை

மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றில் ஒப்படைக்கும் உரிமையை பொலிஸாருக்கு வழங்க நடவடிக்கை

by Staff Writer 22-10-2018 | 7:10 AM
Colombo (News 1st) மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கரவண்டிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் உரிமையை பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக வீதி அபிவிருத்திக்கான தேசியசபை குறிப்பிட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் முச்சக்கரவண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர் மானிகளின் தரம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை அமைச்சருக்கு வழங்கவுள்ளதாக வீதி அபிவிருத்திக்கான தேசியசபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அத்துடன், குறித்த அமைச்சரின் பரிந்துரைக்கமைய, உரிய சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரத்தை வழங்கவுள்ளதாக சிசிர கோதாகொட தெரிவித்தார். இதேவேளை 10 வருடங்களுக்கு பின்னர், இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறைவடைந்துள்ளதாக சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.