அமெரிக்க டொலரும் இலங்கை ரூபாயும்

அமெரிக்க டொலரும் இலங்கை ரூபாயும்

by Staff Writer 22-10-2018 | 4:03 PM

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்தியவங்கி வௌியிட்டுள்ள நாண​ைமாற்று வீதங்களுக்கமைய அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி 173.38 சதமாக காணப்படுகின்றது. இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி டொலருடன் ஒப்பிடுகையில், 11. 99 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த மாதத்தில் மாத்திரம் 1.66 வீதத்தால் ரூபாவின் பெறுமதி வீழச்சியடைந்துள்ளது.