சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திச் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 21-10-2018 | 6:19 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 02. கத்தாரில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஸ்டெஃபர்ட் (Stafford) பாடசாலை மீது, அந்நாட்டின் இலங்கைத் தூதுவர் அழுத்தம் விடுப்பதாக அங்குள்ள இலங்கையர்கள் குறிப்பிட்டுள்ளனர். 03. உண்மைக்குப் புறம்பான சாட்சியம் வழங்கி நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக ஐாதிக ஹெல உறுமய கட்சியின் மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 04. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில், அந்த விடயத்தில் தலையீடு செய்வதாக தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. இங்கிலாந்தில் ஹடர்ஸ்பீல்ட் நகரில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 02. சவுதி அரேபியாவின் காணாமற்போயிருந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி (Jamal Khashoggi), மோதல் ஒன்றில் உயிரிழந்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. 03. தமது அடிப்படை உரிமைகளை மீறுவதாகத் தெரிவித்து ஈக்குவடோர் அரசாங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அஸான்கே (Julian Assange) தீர்மானித்துள்ளார். விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இங்கிலாந்து 3 – 0 என கைப்பற்றியது.