850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைக்கும் அமிதாப் பச்சன்

850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைக்கும் அமிதாப் பச்சன்

850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைக்கும் அமிதாப் பச்சன்

எழுத்தாளர் Bella Dalima

20 Oct, 2018 | 5:10 pm

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் சுமார் 850 பேரின் வங்கிக் கடன்களை அடைக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் மழையின்மை மற்றும் அளவுக்கதிகமான மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பயிர்கள் நாசமானதால் ஏராளமான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக, வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வேளாண்மை பொய்த்துப் போனதுடன், வங்கிக்கடனும் சேர்ந்து தலைமேல் பாரமாகி விட்ட மனவேதனையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

சில மாநிலங்கள் ஓரளவுக்கு விவசாயக் கடனை தள்ளுபடி செய்திருந்தாலும், பரவலாக வங்கிக் கடன்களால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திக்குமுக்காடி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 850 விவசாயிகளின் வங்கிக் கடன்களை தனது சொந்தப் பணத்தில் இருந்து செலுத்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார்.

இதற்கு முன்னர் மகாராஷ்டிரம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 350 விவசாயிகளின் வங்கிக் கடன்களை அடைத்துள்ள அமிதாப் பச்சன், ‘என்னால் இயன்ற இந்த சிறிய உதவி இதர மாநிலங்களிலும் தொடரும்’ என தனது வலைப்பூ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்