20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி தொலைக்காட்சி

20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி தொலைக்காட்சி

20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி தொலைக்காட்சி

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2018 | 10:00 pm

Colombo (News 1st) தமிழ் பேசும் மக்களின் சக்தியான சக்தி தொலைக்காட்சி இன்று தனது 20ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது.

சக்தி தொலைக்காட்சியின் 20 ஆவது பிறந்த நாள் நிகழ்வு, இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெற்றது.

வாகீசன் குழுவினரின் இசைச் சங்கமத்துடன் சக்தியின் 20 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.

வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

சக்தியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், இரத்னா விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சக்தி சுப்பர் ஸ்டார் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியும் அன்ரனி சுரேந்திராவின் இசை நிகழ்ச்சியும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை மெருகூட்டின.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்